72. சுந்தரமூர்த்தி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 72
இறைவன்: பக்தஜனேஸ்வரர்
இறைவி : மனோன்மணி
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி
குலம் : ஆதிசைவர்
அவதாரத் தலம் : திருநாவலூர்
முக்தி தலம் : திருஅஞ்சைக்களம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - சுவாதி
வரலாறு : திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர். ஆலால சுந்தரர். ஒரு சமயம் நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பார்வதி தேவியின் சேடிகள் இருவர் மீது இவர் பார்வை சென்றது. இதனைக் கவனித்த இறைவன் பூவுலகில் நீ சென்று இம்மாதர்கள்பால் இன்பம் துய்த்துப் பின் மீள்வாய் என்று ஆணையிட்டார். சுந்தரர் மனம் மிக வருந்தி உலக மாயையிலிருந்து என்னை மீட்டு ஆள வேண்டும் என்று விண்ணப்பித்தார். பூவுலகில் திருநாவலூர் என்னும் தலத்தில் சடையனார் என்பவருக்கும் இசைஞானியார் என்பவருக்கும் திருமகனாக அவதாரம் செய்தார். நம்பிஆரூரர் என்னும் பெயருடன் வளர்ந்து மணப்பருவம் அடைகிறார். புத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்த சடங்கவி சிவாசாரியாரின் மகளை மணமுடிக்க ஏற்பாடுகள் நடைபெருகின்றன. அச் சமயத்தில் இறைவன் முதியவர் வேடத்தில் திருமணத்திற்கு வருகிறார். தன்னிடம் இருந்த ஓலை ஒன்றினைக் காட்டி நம்பி ஆரூரன் எனக்கு அடிமை என்று கூறுகிறார். இந்த வழக்கு திருவெண்ணை நல்லூரிலே வேதியர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பு முதியவருக்குச் சாதகமாக அமைந்தது. வழக்கின்போது முதியவரை ஆரூரர் பித்தா என்று அழைத்தார். வந்தவர் இறைவன் என்று அறிந்த ஆரூரர் இறைவன் விரும்பியபடி பித்தா என்ற சொல்லை முதற்சொல்லாகக் கொண்டு பதிகம் பாடுகிறார். திருவாரூரில் பரவை நாச்சியாரை மணக்கிறார். பின்பு திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணக்கிறார். சங்கிலிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியதால் கண் பார்வை இழக்கிறார். இடக்கண் பார்வையைக் காஞ்சிபுரத்திலும் வலக்கண் பார்வையைத் திருவாரூரிலும் பெறுகிறார். அவிநாசி என்னும் தலத்தில் முதலை உண்ட பாலகனை பதிகம் பாடி மீட்கிறார். திருஅஞ்சைக்களம் என்னும் தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து திருக்கயிலை செல்கிறார்.
முகவரி : அருள்மிகு. பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்– 607204 விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. சம்பந்த குருக்கள்
தொலைபேசி : 04149-224391,
அலைபேசி : 9443382945

இருப்பிட வரைபடம்


கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாயடி யவர்பான்
மெய்த்தாயினு மினியானையவ் வியனாவலர் பெருமான்
பித்தாபிறை சூடீயெனப் பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாமுல கெல்லாமுய வெடுத்தார்.

- பெ.பு. 220
பாடல் கேளுங்கள்
 கொத்தார்மலர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க